ரஷ்ய கடற்படையின் பெல்கோரோட் Belgorod எனும் ராட்சத அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத ஏவுகணை நீர்மூழ்கி கப்பலானது பேரழிவு ஆயுதமான POSEIDON பொசைடான் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்களை சுமக்கும்.
இந்த பொசைடான் ட்ரோன்கள் அணு ஆயுதங்களை சுமக்கும் மேலும் எல்லையில்லா தொலைவுக்கு பயணிக்கும் ஆற்றல் கொண்டதாகும், கடற்கரையோர நகரங்களுக்கு அருகே வெடித்து மிகப்பெரிய சுனாமிகளை உருவாக்கி அழிவை ஏற்படுத்தும், கூடவே அணு ஆயுத துகள்களை காற்றில் பரப்பி விடும்.
தற்போது இந்த நீர்மூழ்கி கப்பலானது தனது தளத்தில் இருந்து புறப்பட்டுள்ளதாகவும் NATO கூட்டமைப்பானது இந்த நீர்மூழ்கி பொசைடான் ட்ரோன்களை சோதனை செய்ய பயணப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க இந்த நீர்மூழ்கி கப்பல் உக்ரைன் களமுன்னனி பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்டு இருக்கலாம் எனவும் சில தகவல்கள் உலா வருகின்றன.