
ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான படையெடுப்பில் Shahed-136 அல்லது Mojaher-6 என ஷாஹெத்-136 அழைக்கப்படும் ஈரானிய தயாரிப்பு தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது அவற்றை விட மிகவும் சக்திவாய்ந்த Arash-2 அராஷ்-2 ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானங்களை ரஷ்யா ஈரானிடம் இருந்து வாங்கி உக்ரைனில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ட்ரோன்களை பற்றி ஈரானிய ராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் கிமோர்ஸ் ஹைதாரி கூறுகையில் இவை இஸ்ரேலிய நகரங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்டவை எனவும்
இவற்றில் ஆப்டிக்கல் மற்றும் தெர்மல் ஸ்கேனர்களை இணைக்க முடியும் எனவும் எதிரி வான் பாதுகாப்பு அமைப்பில் இருந்து வெளியாகும் ரேடார் சிக்னல்களை உணர்ந்து அந்த வான் பாதுகாப்பு அமைப்புகளிடம் சிக்காமல் சென்று இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது எனவும்
சுமார் 2000 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்ட இந்த தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்களால் ஈரானில் இருந்து புறப்பட்டு இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைஃபா போன்ற முக்கிய நகரங்களை தாக்கும் தன்மை கொண்டது எனவும் டர்போஜெட் என்ஜின் கொண்ட இவற்றின் வேகமும் பன்மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் ரஷ்யா தனது ராணுவ தளவாட மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளின் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாத மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் அமைப்புகளையும் ஈரானிடம் இருந்து ரகசியமாக வாங்கி வருவதாகவும் கூறப்படுவது கூடுதல் தகவல் ஆகும்.