ரஷ்யாவால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை 30 நிமிடத்திற்குள் அழிக்க முடியும் அமெரிக்க கோடிஸ்வரர் எலான் மஸ்க் !!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான் அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் ரஷ்யாவால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை 30 நிமிடத்திற்குள்ளாக அணு ஆயுதங்களை ஏவி அழிக்க முடியும் என கூறியுள்ளார்.

அதே போல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடமும் இத்தகைய அணு ஆயுத தாக்குதல் திறன்கள் உள்ளது ஆனால் பெரும்பாலானோர் இதை உணர்ந்து செயல்படுவதில்லை அணு ஆயுத போர் என்பது மிகப்பெரிய முட்டாள்தனம் எனவும் கூறியுள்ளார்.

இதனை எலான் மஸ்க் ட்விட்டரில் அலெக்ஸ் என்ற நபர் உடனான உரையாடலின் போது தெரிவித்துள்ளார், அவரின் இந்த கருத்துக்கு எதிராக பலத்த எதிர்ப்பு மற்றும் விமர்சனம் கிளம்பியுள்ளது.

மேலும் எலான் மஸ்க் உக்ரைன் 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைபற்றிய பகுதிகளை ரஷ்யாவிடம் கொடுக்க வேண்டும் எனவும் தைவான் சீனாவின் சிறப்பு தன்னாட்சி மண்டலமாக மாற வேண்டும் என தெரிவித்த கருத்துக்களும் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.