ரஷ்யா பெலாரஸ் இணைந்து உருவாக்கிய பிராந்திய ராணுவ படைப்பிரிவு !!

பெலாரஸ் மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து ஒரு பிராந்திய ராணுவ கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளனர், இந்த கூட்டமைப்பின் மூலமாக ஒரு கூட்டு ராணுவ படைப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டு ராணுவ படைப்பிரிவில் சுமார் 70,000 பெலாரஸ் வீரர்களும் 15,000 ரஷ்ய வீரர்களும் இருப்பர் எனவும் விரைவில் ரஷ்ய வீரர்கள் பெலாரஸ் வர உள்ளதாகவும் பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலந்து லித்துவேனியா லாத்வீயா போன்ற நாடுகள் பெலாரஸ் நாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை பயிற்றுவித்து வருவதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த பிராந்திய ராணுவ கூட்டமைப்பு கூட்டு படையின் நோக்கம் பிற நாடுகள் உடனான பெலாரஸ் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது தான் என பெலாரஸ் அரசு தெரிவித்துள்ளது.