உக்ரைனுடைய 15% பகுதிகளை தன்னுடன் இணைத்து கொண்ட ரஷ்யா !!
1 min read

உக்ரைனுடைய 15% பகுதிகளை தன்னுடன் இணைத்து கொண்ட ரஷ்யா !!

உக்ரைன் ரஷ்யா போர் துவங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் நேற்று ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளினில் நடைபெற்ற விழாவில் உக்ரைனுடைய பதினைந்து சதவிகித பகுதிகளை ரஷ்யா தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டது.

அதாவது ரஷ்யா உக்ரைனில் கைபற்றி வைத்துள்ள கெர்சோன், ஸப்ரோஸியா பகுதிகள் மற்றும் தனி நாடுகளாக அங்கீரித்திருந்த டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை அப்பகுதி தலைவர்கள் கையெழுதிட்டு ரஷ்யாவுடன் இணைத்து கொண்டனர்.

2014ஆம் ஆண்டு க்ரைமியா பகுதியை எப்படி ரஷ்யா கைபற்றி பொது வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் இணைத்து கொண்டதோ அதே போல் தற்போதும் இந்த பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தியதாகவும் அதில் 99% மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்ததாகவும் கூறி இணைத்துள்ளது.

தற்போது க்ரைமியா பகுதி முழுவதுமாக நிலவழியாக ரஷ்யாவுடன் இதன் மூலம் இணைப்பு பெற்றுள்ளது, அதே நேரத்தில் உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகள் ரஷ்யாவை இதற்காக விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.