சென்னை காஞ்சிபுரத்தில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள்

  • Tamil Defense
  • October 30, 2022
  • Comments Off on சென்னை காஞ்சிபுரத்தில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள்

நேற்று சென்னை காஞ்சிபுரத்தில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின, இது குறித்து பதட்டப்பட எதுவும் இல்லை, பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் இந்திய தரைப்படைக்கு சொந்தமான பகுதியாகும் அனேகமாக சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தின் ஆயுத பயிற்சி களமாக இருக்கலாம்.

இங்கு கண்டெடுக்கப்பட்டவை இரண்டு பொருட்கள்;

1) Carl Gustaf 84mm RCL 84mm ILLG (Illuminating) Round அதாவது 84 மில்லிமீட்டர் ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தக்கூடிய 84மில்லிமீட்டர் ஒளிவீசும் குண்டாகும் இது பொதுவாக வெடிக்காது வெளிச்சத்தை மட்டுமே அளிக்கும் இரவு நேர போர்களில் களத்தில் வெளிச்சம் அளிக்க இதனை பயன்படுத்துவார்கள்.

2) 51mm HE Light Mortar Round அதாவது 51 மில்லிமீட்டர் இலகுரக மோர்ட்டாரில் இருந்து பயன்படுத்தக்கூடியது, இது அதிக வெடிசக்தியை கொண்டது அதற்காகவே 88% RDX மற்றும் 12% WAX (மெழுகு) ஆகியவற்றை கலந்த வெடிமருந்தை வைத்திருப்பார்கள், இங்கே கிடைத்திருப்பது வெடிக்காத குண்டாகும் ஆகவே பயிற்சிக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய Dud எனப்படும் வெடிமருந்து இல்லாத குண்டாகும்.

இரண்டையுமே முன்னால் இந்திய பொதுத்துறை ஆயுத தயாரிப்பு நிறுவனமான OFB எனப்படும் ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் தயாரித்து வந்தது தற்போது MIL எனப்படும் Munitions India Limited எனும் பொதுத்துறை நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.