பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் புடின் இருக்கும் வரை அது நடக்காது உக்ரைன் அதிபர் !!
1 min read

பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் புடின் இருக்கும் வரை அது நடக்காது உக்ரைன் அதிபர் !!

ரஷ்யா சமீபத்தில் உக்ரைனுடைய சில பகுதிகளை தன்னுடன் இணைப்பதாக அறிவித்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி புதிய அரசாணை ஒன்றை கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி பிறப்பித்துள்ளார்.

அதன்படி உக்ரைன் அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் ஆனால் ரஷ்யாவின் அதிபராக விளாடிமீர் புடின் நீடிக்கும் வரை அது நடக்காது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் உக்ரைன் அதிபர் வேலோடிமிர் செலன்ஸ்கி கையெழுத்திட்ட நிலையில் அதனை உக்ரைனுடைய தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அந்த அரசாணையில் உக்ரைனுடைய சுமார் 15 சதவிகித பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ளது அதனை திரும்ப உக்ரைனிய படைகள் மீட்டெடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு மரியாதை மற்றும் நேர்மை ஆகியவை என்றால் என்னவென்றே சிறுதளவும் அறியாதவர் ஆகவே அவருடன் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை என மக்களுக்கு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.