அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை அமெரிக்கா கொலை செய்யலாம் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !!

  • Tamil Defense
  • October 12, 2022
  • Comments Off on அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை அமெரிக்கா கொலை செய்யலாம் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தவர் ஜாண் போல்டன் ஆவார் இவர் சமீபத்தில் இங்கிலாந்து ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரஷ்ய அதிபர் புடினை போன்ற தலைவர் ஒருவரை கொல்லும் திறன் அமெரிக்காவுக்கு உண்டா என கேட்க அதற்கு ஜாண் போல்டன் உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை கொல்லாம் என தெரிவித்தார்.

மேலும் அவர் ஒருவேளை அது அடுத்த நாளையே நடக்காமல் இருக்கலாம் ஆனால் விளாடிமீர் புடின் ஒருநாள் அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் இதனை ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் புரிந்து கொள்ள வேண்டும் எனவும்

ரஷ்ய அதிபரை தொடக்கூட முடியாது என்பதை நான் நிச்சயமாக ஒருபோதும் ஒப்பு கொள்ள மாட்டேன், அமெரிக்காவுக்கு ஆபத்தாக விளங்கினால் என்ன நடக்கும் என்பதை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கொலை செய்யப்பட்ட ஈரானிய ராணுவ அதிகாரி காசெம் சொலைமானியின் மரணத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.