உக்ரைனில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படாது ரஷ்ய அதிபர் புடின் உறுதி !!

  • Tamil Defense
  • October 29, 2022
  • Comments Off on உக்ரைனில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படாது ரஷ்ய அதிபர் புடின் உறுதி !!

வியாழக்கிழமை அன்று ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச வெளியுறவு கொள்கை நிபுணர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசினார், அப்போது அவர் உக்ரைனில் அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டமில்லை என்றார்.

அதாவது உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான தேவை எதுவும் இல்லை குறிப்பாக ராணுவ ரீதியாகவும் சரி அரசியல் ரீதியாகவும் சரி அதை செய்வதில் எந்தவொரு நன்மையும் இல்லை என கூறினார்.

அதே நேரத்தில் ரஷ்யா அணு ஆயுத பயன்பாடு பற்றி பேசியது முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் போன்ற தலைவர்கள் அணு ஆயுத பிரயோகம் குறித்து பேசியதாலேயே அதற்கு பதிலடி கொடுக்கவும் தயாராக இருக்கவும் வேண்டி எச்சரிக்கை விடுத்ததாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் உக்ரைன் போர் மேற்குலக நாடுகளின் உலக வல்லாதிக்க நோக்கத்தின் வெளிப்பாடு அதனை ரஷ்யா தகர்த்து உள்ளதாகவும் மேற்குலகம் இனியும் உலக நாடுகளுக்கு உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்க முடியாது எனவும் அழுத்தமாக தனது கருத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.