மேற்குலக நாடுகளை காட்டமாக விமர்சித்த புடின்; இந்தியாவை சுரண்டியதாகவும் குற்றச்சாட்டு !!
1 min read

மேற்குலக நாடுகளை காட்டமாக விமர்சித்த புடின்; இந்தியாவை சுரண்டியதாகவும் குற்றச்சாட்டு !!

உக்ரைனில் கைபற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளும் விழாவில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் மேற்குலக நாடுகளை மிகவும் காட்டமாக விமர்சனம் செய்தார்.

அதாவது காலனியாதிக்கம் மூலமாக இந்தியா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி கொழுத்தாகவும், சீனாவில் போதை பொருள் விற்க அந்நாட்டுடன் போர் புரிந்து வீழ்த்தியது

அமெரிக்காவை அடிமைப்படுத்தி அங்கு வாழ்ந்த மக்களை கொன்று குவித்தது, அடிமை வியாபாரம் செய்தது, உலகம் முழுவதும் பல்வேறு இனக்குழு மக்களை வேட்டையாடி கொன்று குவித்தது போன்றவற்றை சுட்டி காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதே போல் விதித்த பொருளாதார தடைகள் போதாதென்று NordStream 1 மற்றும் NordStream 2 ஆகிய எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு செல்லும் குழாய்களையும் தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் குற்றம்சாட்டி பேசினார்.

அவரது கருத்துக்களை வழிமொழியும் வகையில் மேற்குலக நாடுகள் பல நாடுகளை பலவீனமடைய செய்ததோடு மட்டுமின்றி பல நாடுகளை உடைத்ததாகவும் பல ரஷ்ய அதிகாரிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.