
கடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய படைகள் நடத்திய அணு ஆயுத போர் ஒத்திகையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பார்வையிட்டதாக ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு இதுகுறித்து பேசும்போது ரஷ்யா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலடியாக பன்மடங்கு வீரியம் மிக்க அணு ஆயுத தாக்குதலை நடத்துவது தான் இந்த பயிற்சிகளின் நோக்கம் என்றார்.
க்ரெம்ளின் வெளியிட்ட செய்தியறிக்கையில் அணு ஆயுத போர் ஒத்திகையின் அனைத்து நோக்கமும் நிறைவேறியதாகவும் ஏவுகணைகள் இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையே அணு ஆயுத போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா இந்த பயிற்சிகளை நடத்தியதும் அதனை முன்கூட்டியே அமெரிக்காவுக்கு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.