
போலந்து தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் தென்கொரியாவிடம் இருந்து சுமார் 300 K239 Chunmoo சுன்மோ ரக பலகுழல் ராக்கெட் ஏவும் அமைப்புகளையும் அவற்றிற்கான 23,000 ராக்கெட்டுகளையும் வாங்க உள்ளது.
அடுத்த வாரம் போலந்து நாட்டின் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான மரியூஸ் பிளாக்ஸாக் தென்கொரிய தலைநகர் சியோல் நகருக்கு பயணம் மேற்கொள்ளும் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இதனை பற்றி மரீயூஸ் பிளாக்ஸாக் பேசும்போது இது ஒரு அற்புதமான ஆர்டில்லரி ஆயுதம் உக்ரைனில் ஆர்டில்லரி பயன்பாடு மூலமாக அவற்றின் தேவை மற்றும் அவற்றின் பலத்தை உணர்ந்துள்ளோம் ஆகவே இவற்றை வாங்க விரும்புகிறோம் என்றார்.
தென்கொரிய நிறுவனமான Hanwha Group ஹான்வாஹா குழுமம் தயாரிக்கும் இந்த K239 Chunmoo ரக பலகுழல் ராக்கெட் அமைப்புகள் மற்றும் 70-300 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் 23,000 ராக்கெட்டுகளை வாங்க உள்ளனர்.
அதே போல அமெரிக்காவிடம் இருந்து 500 M-142 HIMARS High Mobility Rocket Artillery System பலகுழல் ராக்கெட் அமைப்புகளை வாங்க போலந்து விரும்புகிறது ஆனால் ஏதோ காரணத்தால் அது நடைபெறாமல் காலதாமதம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.