ஃபிலிப்பைன்ஸ் அமெரிக்கா இடையே சீனாவுக்கு பேராபத்து உண்டாக்கும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • October 29, 2022
  • Comments Off on ஃபிலிப்பைன்ஸ் அமெரிக்கா இடையே சீனாவுக்கு பேராபத்து உண்டாக்கும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் !!

ஃபிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க அரசுகள் விரைவில் EDCA Enhanced Defence Cooperation Agreement அதாவது விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நடவடிக்கைளை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்த ஒப்பந்தம் செயலுக்கு வரும்பட்சத்தில் சீனாவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுக்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை அதற்கு காரணம் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க படைகளின் நடமாட்டம் இருக்கும்.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க படைகள் மற்றும் தளங்கள் ஆகியவை வரும், அணு ஆயுதம் தவிர பிற ஆயுதங்கள் மற்றும் சப்ளைகளை குவிக்க முடியும், படையெடுப்புகளை முறியடிக்க தேவையான திறன வளர்ப்பு போன்றவை நடைபெறும்.

இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்க ராணுவ தளங்களை ஃபிலிப்பைன்ஸ் ராணுவமும் பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இந்த ஒப்பந்தம் காலாவதியானாலும் ஆகாவிட்டாலும் ராணுவ தளங்கள் ஃபிலிப்பைன்ஸ் அரசுக்கு சொந்தமானவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சில அமெரிக்க படைத்தளங்களின் பெயர்களாவன; பலாவன் பகுதியில் உள்ள அன்டோனியோ பாடிஸ்டா விமானப்படை தளம், பம்பங்கா பகுதியில் உள்ள பாசா விமானப்படை தளம், நியுவே எகிஜா பகுதியில் உள்ள மக்சேசே தரைப்படை தளம் மற்றும் செபுவில் உள்ள பெனிட்டோ இபுயென் விமானப்படை தளம் போன்றவை ஆகும்.