புதிய இந்திய ஆளில்லா தாக்குதல் விமானம் விரைவில் அறிமுகம் !!

  • Tamil Defense
  • October 17, 2022
  • Comments Off on புதிய இந்திய ஆளில்லா தாக்குதல் விமானம் விரைவில் அறிமுகம் !!

PARAS Defence & Space Technologies குழுமத்தின் ஒரு பிரிவான Paras Aerospace விரைவில் துவங்க உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் தான் தயாரித்த புதிய ஆளில்லா தாக்குதல் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய UCAV Unmanned Combat Aerial Vehicle முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும் இது ஒரு HALE High Altitude Long Endurance அதாவது அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானமாகும்.

சுமார் 5000 கிலோ எடை கொண்ட இது 1000 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து பறக்கும், ஆயுதங்களை சுமக்க சிறகுகளில் 8 இடங்கள் உள்ளன, அதிநவீன மைக்ரோ குண்டு, குறைந்த எதிர்ப்பு விசை குண்டு, வானிலக்கு ஏவுகணைகள் ஆகியவற்றை இதனால் சுமக்க முடியும்.

மேலும் இதில் ELINT, COMINT அதாவது மின்னனு உளவு மற்றும் தகவல் தொடர்பு உளவு, கண்காணிப்பு கேமரா, அகச்சிவப்பு கதிர்வீச்சு அமைப்பு, இரட்டை செயற்கை கோள் தொடர்பு, தற்காப்பு அமைப்பு மற்றும் AESA, மோதல் தடுப்பு, வான் கண்காணிப்பு ரேடார் அமைப்புகள் இருக்கும்.

பராஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது இஸ்ரோ ISRO, பெல் BEL மற்றும் DRDO போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிக்கது அந்த வகையில் ஏற்கனவே ராணுவ பயன்பாட்டிற்கான ஆளில்லா விமானங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.