பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்டோபர் 27 வியாழக்கிழமை அன்று 1947 இந்திய பாகிஸ்தான் போரில் பங்கேற்க சீக்கிய படை வீரர்கள் ஶ்ரீநகர் சென்றடைந்த நாளை குறிக்கும் ஷவுர்ய திவாஸ் நிகழ்ச்சியில் ஶ்ரீநகர் விமானப்படை தளத்தில் பேசினார்.

அப்போது அவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட மிஷன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுவதுமாக கைபற்றி இந்தியாவுடன் இணைக்கும் போது தான் நிறைவேறும் என்றார்.

குறிப்பாக இந்திய பாராளுமன்றத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய ஒருங்கிணைந்த காஷ்மீர் தீர்மானத்தை சுட்டி காட்டி பேசிய அவர்

ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு முடிவுரை எழுதப்படும் அந்த நாள் தொலைவில் என பேசியது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு பாகிஸ்தானில் குறிப்பாக அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.