
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளுள் ஒன்று என லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸ் தேர்தல் கமிட்டியின் வரவேற்பு கூட்டத்தில் பேசும்போது தெரிவித்துள்ளார்.
இது பாகிஸ்தானை மிகவும் கடுப்பேற்றி உள்ளது, இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரிடம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் இம்ரான் கான் அரசு நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது இதனால் அனைத்து இடத்திலும் அவமானம் ஏற்பட்டுள்ளது ஆகவே அவற்றையெல்லாம் சரி செய்து மற்ற நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தானை விமர்சனம் செய்ததற்கான காரணமாக அணு ஆயுதங்களை பாகிஸ்தான் எந்தவித பாதுகாப்பும் இன்றி வைத்திருப்பதே ஆகும் அதை சுட்டி காட்டி தான் அவர் பாகிஸ்தானை விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.