துருக்கி ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டு பயிற்சிகளை நிறைவு செய்த பாகிஸ்தான் விமானப்படை !!
பாகிஸ்தான் விமானப்படை தான் உலகிலேயே முதல் முதலாக துருக்கியிடம் இருந்து அகின்சி Akinci ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்கிய நிலையில் தற்போது அவற்றின் பயன்பாட்டு பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த பேகார் பைராக்தார் அகின்சி ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை பயன்படுத்துவது குறித்து பாகிஸ்தான் விமானப்படையின் வீரர்கள் பேகார் நிறுவனத்தின் உதவியோடு பயிற்சி பெற்று வந்தனர் தற்போது அந்த பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன.
பேகார் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் துருக்கி, பாகிஸ்தான், அஸர்பெய்ஜான் ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த சுமார் 110 விமானிகள் மற்றும் இதர பணியாளர்கள் இந்த பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதாவது விமானிகள், ஆயுத ஏற்றுனர்கள், மெக்கானிக்குகள், என்ஜின் டெக்னிசியன்கள், தரை கட்டுபாட்டு நிலைய பணியாளர்கள், மின்னனு கட்டுபாட்டு மைய அதிகாரிகள், ஆயுத இயக்குனர்கள் போன்றோர் பயிற்சி நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.