காட்டு பன்றியை மோதி வெடித்து சிதறிய பாகிஸ்தான் F-16 போர் விமானம்; அறிந்திராத கதை !!

  • Tamil Defense
  • October 6, 2022
  • Comments Off on காட்டு பன்றியை மோதி வெடித்து சிதறிய பாகிஸ்தான் F-16 போர் விமானம்; அறிந்திராத கதை !!

கடந்த 1987ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு தென்கிழக்கே 120 மைல்கள் தெற்கே அமைந்துள்ள மிக முக்கியமான விமானப்படை தளங்களில் ஒன்றான சர்கோதா விமானப்படை தளத்தில் தான் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதாவது ஒரு F-16 போர் விமானம் இரவு நேர ரோந்து பணிக்காக புறப்படுவதற்கு வேகமாக ஒடு பாதையில் சென்று கொண்டிருந்த போது ஒடுபாதையில் நுழைந்த காட்டுபன்றியின் மீது முன்பக்க சக்கரம் மோதி உடைந்து போனது

இதையடுத்து விமானத்தின் மூக்குபகுதி தரையில் மோதி விமானம் ஒடுபாதையை விட்டு விலகி குட்டி கரணம் அடித்து நொறுங்கி தீப்பிழம்பாக வெடித்து சிதறி அழிந்து போனது.

இந்த விபத்தில் போர் விமானி உயிர் தப்பினாலும், காட்டு பன்றி விமானப்படை தளத்திற்குள் நுழையும் அளவிற்கு விமானப்படை தளத்தின் சுற்று சுவர்கள் இருந்தது போன்ற காரணங்களால் பாகிஸ்தான் விமானப்படை அவமானப்பட்டு நின்றது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த விபத்து பற்றி பேட்டி அளித்த மூத்த பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒருவர் அதெல்லாம் ஆதாரமற்ற தகவல்கள் அப்படி எதுவும் இல்லை என முடி மறைக்க முயன்றதும்

பின்னர் அப்போதைய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ராணா நயீம் மெஹ்மூத் கான் பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் உண்மை தான் எனவும் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளை தடுக்கும் விதமாக சர்கோதா விமானப்படை தளத்தில் ஆறு அடி உயர சுற்றுசுவர் கட்டுபட்டு உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சர்கோதா மிகவும் செழிப்பான பகுதியாகும், விவசாய நிலங்கள் மற்றும் காட்டு பகுதிகள் சுற்றியுள்ள பகுதியாகும், விளைநிலங்களை சூறையாட காடுகளில் இருந்து அதிகளவில் காட்டுபன்றிகள் வருவதும் இங்கு சர்வ சாதாரணமான நிகழ்வாகும்.