காஷ்மீரில் குறைந்து வரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை !!

  • Tamil Defense
  • October 30, 2022
  • Comments Off on காஷ்மீரில் குறைந்து வரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை !!

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இதற்கு முக்கிய காரணம் காஷ்மீர் மக்களிடையே பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஆதரவு குறைந்து வருவது தான் என கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி காஷ்மீரில் சுமார் 83 வெளிநாட்டு பயங்கரவாதிகளும் 54 உள்ளூர் பயங்கரவாதிகளும் உள்ளதாக பாதுகாப்பு படைகள் தகவல்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஒரு மூத்த அதிகாரி பேசும்போது கடந்த ஆண்டு நிலவரப்படி காஷ்மீரில் சுமார் 100 வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருந்ததாகவும் தற்போது அவர்களின் எண்ணிக்கையை குறைத்ததாகவும் பயங்கரவாத இயக்கங்களில் இணைவதை தடுத்துள்ளதாக தெரிவித்தார்.