பிரங்கிகளை சுட்டும் போர் விமானங்களை எல்லைக்கு அருகே பறக்க விட்டும் வடகொரியா அட்டகாசம் !!
1 min read

பிரங்கிகளை சுட்டும் போர் விமானங்களை எல்லைக்கு அருகே பறக்க விட்டும் வடகொரியா அட்டகாசம் !!

வடகொரியா தென் கொரியா உடனான எல்லையோரம் அருகே நூற்றுக்கணக்கான பிரங்கி குண்டுகளை சுட்டும் குறுந்தூர ஏவுகணை ஒன்றை கடலை நோக்கி ஏவியும் உள்ளது.

இது போதாதென்று 10 போர் விமானங்களை தென்கொரிய எல்லைக்கு மிக மிக அருகே பறக்கவிட்டுள்ளது இதனை தொடர்ந்து தென்கொரிய விமானப்படையும் போர் விமானங்களை பறக்க விட்டுள்ளது.

சமீபத்தில் வடகொரியா நடத்திய தொடர் ஏவுகணை சோதனைகள் காரணமாக தென்கொரியா 15 வடகொரிய அதிகாரிகள் மற்றும் 16 வடகொரிய அமைப்புகள் மீது தடைகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் திட்டத்தில் உதவியதோடு சர்வதேச தடைகளால் பாதிக்கப்படாமல் இருக்க உதவியுள்ளனர் என கூறப்படுகிறது.

ஆகவே தென்கொரியாவின் இந்த பொருளாதார தடைகளை தொடர்ந்து ஆத்திரமடைந்த வடகொரியா தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.