ரஷ்யா ஐரோப்பா எரிசக்தி குழாய் வெடிப்பு; அமெரிக்க குண்டு பாகங்கள் கண்டுபிடிப்பு !!

  • Tamil Defense
  • October 20, 2022
  • Comments Off on ரஷ்யா ஐரோப்பா எரிசக்தி குழாய் வெடிப்பு; அமெரிக்க குண்டு பாகங்கள் கண்டுபிடிப்பு !!

சில வாரங்களுக்கு முன்னர் ரஷயாவில் இருந்து ஐரோப்பா செல்லும் Nord stream – 1 மற்றும் Nord stream – 2 ஆகிய இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் குழாய்கள் கடலுக்கு அடியே வெடிவைத்து தகர்க்கப்பட்டன இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போதே இது அமெரிக்க கடற்படையின் வேலையாக தான் இருக்கும் என பலத்த சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது அதை நிருபிக்கும் வகையில் அமெரிக்க தயாரிப்பு வெடிகுண்டு உடைய பாகங்கள் சம்வ இடத்தில் கிடைக்க பெற்றுள்ளதாகவும் மேலும் இந்த தாக்குதலில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் நார்வே கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வை நார்வே நாட்டை சேர்ந்த ப்ளூ ஐ ரோபோட்டிக்ஸ் Blue Eye Robotics நிறுவனத்தின் உதவியோடு மூலமாக நார்வே கடற்படை Nord Stream – 1 எரிவாயு குழாயில் கடலுக்கு அடியே 80 மீட்டர் ஆழத்தில் ரோபோட் அனுப்பி ஆய்வு செய்த போது தெரிய வந்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிக்கையில் இத்தனை வலுவான தடிமனான குழாய்களை தகர்க்கவோ அல்லது வளைக்கவோ மிகவும் அதிக சக்தி தேவைப்படும் என அந்த ரோபோட் நீர்மூழ்கியின் இயக்குனர் ட்ரான்ட் லார்சன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அதே போல Nord Stream – 2 குழாயிலும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக டென்மார்க் காவல்துறை ஆய்வு மூலம் உறுதிப்படுத்தி உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது, ஸ்வீடன் ஜெர்மனி நார்வே டென்மார்க் ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

ஆனால் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் கசிந்து விடும் என டென்மார்க் அஞ்சுவதால் கூட்டு விசாரணைக்கு மறுத்து வருகிறது அதே நேரத்தில் ரஷ்யா தன்னையும் விசாரணையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகியவை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.