பாகிஸ்தானை போல பயங்கரவாதத்தை பழகும் நாடு வேறு இல்லை வறுத்து எடுத்த வெளியுறவு அமைச்சர் !!

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற Rising Indian & The World : Foreign Policy in Modi era எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் அப்போது பாகிஸ்தானை வறுத்து எடுத்தார்.

நமக்கு ஒரு அண்டை நாடு உள்ளது, நாம் தகவல் தொழில்நுட்ப துறையில் (IT Information Technology ) வல்லுநர்களாக உள்ளோம் , அவர்களோ (IT International Terrorism) சர்வதேச பயங்கரவாதத்தில் வல்லுநர்களாக உள்ளனர், இது பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் நல்ல வேளையாக நம்மால் உலகிற்கு பயங்கரவாதம் என்றால் என்ன, இன்று எங்களுக்கு நடப்பது நாளை உங்களுக்கு நடைபெறலாம் என்பதை எடுத்த விளக்க முடிகிறது எனவும்,

பாகிஸ்தானை போல பயங்கரவாதம் பழகும் நாடு உலகில் வேறில்லை, உலகில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்த பயங்கரவாத செயல்களை போல செய்த வேறு ஒரு நாட்டை கூட நாம் பார்க்க முடியாது, மும்பை தாக்குதலுக்கு பிறகு நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வெளியுறவு கொள்கையை சிறப்பாக பயன்படுத்தி வருவதாகவும் முன்னர் பல நாடுகள் தங்களுக்கு பாதிப்பில்லை என கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது பயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது சர்வதேச அளவிலான அழுத்தம் உள்ளது, இது வெளியுறவு கொள்கையின் வெற்றி எனவும் கூறினார்.