உள்நாட்டு தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கான உள்நாட்டு இரவில் பார்க்கும் கருவிகள் வாங்க ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • October 21, 2022
  • Comments Off on உள்நாட்டு தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கான உள்நாட்டு இரவில் பார்க்கும் கருவிகள் வாங்க ஒப்பந்தம் !!

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் உள்நாட்டு தயாரிப்பு ப்ரச்சந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களில் பயன்படுத்த தேவையான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரவில் பார்க்கும் கருவிகளை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

அந்த வகையில் ப்ரச்சந்த் தாக்குதல் ஹெலிகாப்டரை தயாரிக்கும் HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் கான்பூரை தலைமையகமாக கொண்ட MKU பாதுகாப்பு நிறுவனத்தின் ஒரு பிரிவான Netro Optronics நெட்ரோ ஆப்ட்ரானிக்ஸ் இடையே இதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கையெழுத்து ஆகியுள்ளது.

NETRO NB-3100 ANVG இரவில் பார்க்கும் அமைப்புகள் ஒன்றுமே தெரியாத இருட்டிலும் கூட விமானிகள் தரை இறங்கவும் மேலேம்பவும் உதவும் இதில் உள்ள மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் தான் இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

NETRO OPTRONICS நெட்ரோ ஆப்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ப்ராச்சி குப்தா இந்த ஒப்பந்தம் பற்றி பேசுகையில் இதுவரை இந்தியா இத்தகைய கருவிகளை இறக்குமதி செய்து வந்தது இந்த ஒப்பந்தம் மூலமாக முதல்முறையாக அந்த நிலை மாறும் இனி ANVG – Aviation Night Vision Goggles அமைப்புகளை இனி வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.