இந்திய விமானப்படையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட உள்ளதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி விமானப்படை தின விழாவில் அறிவித்தார்.
தற்போது பறத்தல், தரை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகள் உள்ளன, மேலும் இந்த மூன்று பிரிவுகளை சார்ந்த 10 இணை பிரிவுகளும் உள்ளன.
பறத்தல் பிரிவில் போர் விமானம், ஹெலிகாப்டர், சரக்கு போக்குவரத்து விமானிகளும் WSO எனப்படும் போர் விமானத்தில் ஆயுதங்கள் அது சாரந்த சென்சார்களை கையாளும் அதிகாரிகள் இருப்பர்.
தரை பிரிவில் வானிலை, கணக்கியல், வான் பாதுகாப்பு, விமான கட்டுபாட்டு, சிறப்பு படைகள், தளவாடங்கள், கல்வி , மருத்துவம் போன்ற உப பிரிவுகள் இருக்கும், தொழில்நுட்ப பிரிவில் இயந்திர மற்றும் மின்னு பொறியியல் பிரிவுகள் அடங்கும்.
தற்போது WSO Weapon System Operators அதாவது ஆயுத அமைப்புகள் கட்டுபாட்டு பிரிவு உருவாக்கப்பட உள்ளது, இதில் போர் விமானத்தில் உள்ள WSO அதிகாரிகள் மற்றும் வான் பாதுகாப்பு பிரிவுகள் ஆகியவை இணைக்கப்பட உள்ளன.
இந்த பிரிவில் மொத்தம் நான்கு இணை பிரிவுகள் உள்ளன அவையாவன பறத்தல், ரிமோட், Intelligence மற்றும் Surface ஆகியவை ஆகும் பறத்தல் பிரிவில் போர் விமான WSO அதிகாரிகள் இருப்பர், ரிமோட் பிரிவில் ட்ரோன் விமானிகள், Intelligence உளவு பிரிவு மற்றும் Surface வான் பாதுகாப்பு மற்றும் இதர ஆயுத அமைப்புகளை கையாளும் என தெரிகிறது.
இந்த மிக முக்கியமான மறுசீரமைப்பு நடவடிக்கை மூலமாக இந்திய விமானப்படைக்கு ஆண்டு தோறும் சுமார் 3400 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும் அவற்றை மேலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ள முடியும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.