குஜராத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ள புதிய விமானப்படை தளம் விரைவில் அடிக்கல் நாட்டும் பிரதமர் !!

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள டீசா பகுதியில் இந்திய விமானப்படைக்கான ஒரு புதிய விமானப்படை தளத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய விமானப்படை தளத்தை கட்டமைக்க சுமார் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் இதற்காக சுமார் 4500 ஏக்கர் அளவிலான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது, இதற்கான அடிக்கல் பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ள பிரதமர் மோடியால் நாட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானப்படை தளத்தில் BOEING C-17 Globemaster சி-17 போன்ற மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானங்கள் கூட தரை இறங்க முடியும் மேலும் இந்த தளம் பாகிஸ்தான் உடனான எல்லையில் இருந்து வெறுமனே 130 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ளதும் ஆகவே பாகிஸ்தானை கண்காணிப்பது அல்லது தாக்குவது எளிது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

இந்த தளமானது மஹாராஷ்டிரா குஜராத் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பொறுப்பான தென்மேற்கு கட்டளையகத்தின் கீழ் இயங்கும், மேலும் குஜராத்தில் ஏற்கனவே உள்ள பூஜ், நாலியா ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர்,ஜெய்ப்பூர் மற்றும் பார்மர் விமானப்படை தளங்களுடன் இணைந்து செயலாற்றும் என கூறப்படுகிறது.

இந்த விமானப்படை தளத்தை ராணுவ பொறியியல் சேவைகள் பிரிவு மேற்கொள்ள உள்ளது இதன் கட்டுமானம் வருகிற 2024ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்பதும் மேற்கு எல்லையோரம் பாதுகாப்பை பன்மடங்கு வலுப்படுத்த உதவும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.