ஒரு காலத்தில் ஐ.எஸ்.ஐ அமைப்பின் சொர்க்கபுரியாக திகழ்ந்த நேபாளம் இன்று அவர்களுக்கு நரகம் !!

  • Tamil Defense
  • October 25, 2022
  • Comments Off on ஒரு காலத்தில் ஐ.எஸ்.ஐ அமைப்பின் சொர்க்கபுரியாக திகழ்ந்த நேபாளம் இன்று அவர்களுக்கு நரகம் !!

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டூவில் லால் முஹம்மது எனும் பாகிஸ்தானியரும் இந்தியாவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கும்பல் மற்றும் தாவூத் இப்ராஹீம் கும்பலுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவனை மர்ம் நபர்கள் பொது இடத்தில் சுட்டு கொன்றனர்.

58 வயதான லால் முஹம்மது கொலை குற்றம் ஒன்றில் குற்றவாளியாக தீர்க்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போது 2017ஆம் ஆண்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வெளியே வந்து துணி வியாபாரம் தொடங்கினான் ஆனாலும் இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தி கொள்ளவில்லை என்பதை நேபாள ஆயுத காவல்படை தெரிவித்துள்ளது.

நேபாளம் மிக நீண்ட காலமாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ யின் சொர்க்கபுரியாக திகழந்து வந்தது முன்னேற்றம் இல்லா பொருளாதாரம், இந்தியா போன்ற கலாச்சாரம், நேபாளத்தில் கொழித்த லஞ்சம், இந்தியாவில் குறிப்பாக பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்த கிரிமினல் கும்பல்களின் செயல்பாடுகள் இதனை சாத்தியமாக்கியது.

1990களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 70 முதல் 80 சதவிகிதம் வரையிலான கள்ள நோட்டுகள் அனைத்தும் நேபாளம் வழியாக உள்ளே வந்தன மேலும் ஆயுதங்களும் உள்ளே வந்தன 80கள் துவங்கி 90கள் வரையிலான காலகட்டத்தில் நேபாளத்திற்கு கேளிக்கை மற்றும் சுற்றுலா சென்ற பல அரசியல்வாதிகள் மற்றும் இந்திய அதிகாரிகள் அங்கிருந்த ஐ.எஸ்.ஐ நெட்வொர்க்கால் பணம் அல்லது பெண் மூலமாக வீழ்த்தப்பட்டனர்.

இப்படியிருக்க 1999ல் இந்தியாவில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டூ நோக்கி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு ஆஃப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் பகுதிக்கு கொண்டு செல்லப்ட்டது இதில் பாகிஸ்தானுடை தொடர்பு ஒருபுறம் இருக்க கடத்தல்காரர்களுக்கு காத்மாண்டூவில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும் உதவியது வெளிச்சத்திற்கு வர இந்தியா மற்றும் நேபாளம் கூட்டாக களமிறங்கின.

அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இந்தியாவுக்கு பாகிஸ்தானுடைய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நேபாளம் மற்றும் வங்கதேச பிரதேசங்களை தவறான செய்லகளுக்கு பயன்படுத்தி வருவது தெரியுமீ இந்த விவகாரம் நேபாள அரசுடன் இந்தியாவால் விவாதிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அடுத்து தொடர்ந்த நடவடிக்கைகள் 1993ல் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பிற்கு பிறகு கூட எடுக்கப்படவில்லை மேற்குறிப்பிட்ட குண்டுவெடிப்பின் முன்னேற்பாடுகள் மற்றும் அதற்கு பிறகான பல நடவடிக்கைகள் நேபாள தலைநகரில் இருந்து பாகிஸ்தானால் ஒருங்கிணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அரசால் நேபாளத்தில் உள்ள இந்திய உளவுத்துறையினருக்கான நிதி மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது மேலும் பாகிஸ்தான் அரசுக்கு இனிமேலும் நேபாள மண் இந்திய எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி வரப்படுவதை இந்தியா அனுமதிக்காது என்ற செய்தியை சொல்லும் பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

கடந்த 2017ஆம் ஆண்டில் ஒய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரியும் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவை ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்திய சம்பவத்தில் தொடர்புடையவருமான லெஃப்டினன்ட் கர்னல் ஹபீப் ஸாஹீர் காத்மாண்டூவில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் அதை மோப்பம் பிடித்த இந்திய அதிகாரிகள் அவரை ஐ.நா அதிகாரிகள் போல தொடர்பு கொண்டு பின்னர் நேபாள தலைநகர் காத்மாண்டூ வரவழைத்து கடத்தியுள்ளனர் தற்போது வரை அவருக்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை இந்திய அரசு எங்களுக்கு இதில் தொடர்பில்லை என கையை விரித்துவிட்டது.

2013ஆம் ஆண்டு இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பத்கால் நேபாளத்தின் பொகாராவில் கைது செய்யப்பட்டான், செப்டம்பர் 2018ல் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய மற்றொரு ஐ.எஸ்.ஐ உளவாளியான குர்ஷீத் ஆலம் நேபாளத்தில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டான்.

மார்ச் 2010ல் ஊடக தொழிலதிபரான ஸமீன் ஷா காத்மாண்டூவில் ஃபிரான்ஸ் நாட்டு தூதரகத்திற்கு எதிரே சாலையில் தனது வாகனத்தில் டிராபிக் சிக்னலுக்காக காத்திருந்த போது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டான்.

ஏப்ரல் 2011ல் காத்மாண்டூவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்த மெஹ்பூப் ஆசீஃப் பசுந்தரா பகுதியில் உள்ள தூதரக வளாகத்தை விட்டு வெளகயே வந்த போது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டான்.

முன்னாள் நேபாள அமைச்சரும் தாவூத் இப்ராஹீமின் நெருங்கிய கூட்டாளியுமான மியா அன்சாரியின் மகன் யூனுஸ் அன்சாரி இந்திய கள்ளநோட்டு கும்பலின் தலைவன் ஆவான் இவன் 2011ஆம் சிறையில் சுடப்பட்டும் எப்படியோ தப்பினான் பின்னர் 2019ஆம் ஆண்டு கத்தாரில் மூன்று பாகிஸ்தானியர்களோடு கள்ளநோட்டுகளுடன் கைது செய்யப்பட்டு தற்போது லகிம்பூர் சிறையில் உள்ளான், தான் கொல்லபடாமல் இருக்க வேண்டுமென மாட்டி கொண்டதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஜனவரி 2020ல் நேபாளத்தில் துணி வியாபாரம் செய்து வந்த தாவூத் இப்ராஹீமின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவனான எஜாஸ் லக்தவாலா கைது செய்யப்பட்டான், கள்ளநோட்டு கும்பலின் முக்கிய உறுப்பினர் அல்தாஃப் ஹூசைன் அன்சாரி வேண்டுமெனவே மாட்டி கொண்டான்.

நேபாள இஸ்லாமிய சங்கத்தின் தலைவனும் ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளியுமான ஃபைசான் அஹமது செப்டம்பர் 2011ல் ஒரு மசூதிக்கு வெளியே வந்த போது மர்ம் நபர்களால் சுட்டு கொல்லப்பட்டான், அதே
போல கள்ளநோட்டு கும்பலின் முக்கிய உறுப்பினரான அஃப்தாஃப் ஆலம் அன்சாரி ஜனவரி 2014ல் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டான்.

இன்றைய தேதிக்கு எந்தவொரு மூத்த பாகிஸ்தான் அதிகாரியும் நேபாளத்திற்குள் இந்திய மற்றும் நேபாள உளவுத்துறையினரின் கண்களில் சிக்காமல் ரகசியமாக வந்து செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நேபாளத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பினரின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது, அவர்கள் கொல்லப்படும் வரை மரணத்தை பற்றிய சிந்தனையுடன் பயந்து கொண்டே வாழும் நிலைக்கு இந்திய உளவுத்துறையால் தள்ளப்பட்டுள்ளனர் என்றால் மிகையல்ல.