அணு ஆயுத போர் பயிற்சி மேற்கொள்ள தயாராகும் நேட்டோ !!

நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் படைகள் விரைவில் நடைபெற உள்ள Operation Steadfast Noon ஆபரேஷன் ஸ்டெட்ஃபாஸ்ட் நூன் எனும் கூட்டு அணு ஆயுத போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளன, இதில் நேட்டோ விமானங்களை சுமந்து சென்று எதிரி இலக்குகளை தாக்குவது போல் பயிற்சிகளை மேற்கொள்ளும்.

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கியூபா அணு ஆயுத பிரச்சினைக்கு பிறகு தற்போது தான் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான அணு ஆயுத போர் பதட்டம் அதிகமாக உள்ளது என கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த நிலையில் இந்த அணு ஆயுத போர் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் அளித்த பேட்டியில் இது நேட்டோவின் வருடாந்திர ஒத்திகை தான் இந்த ஆண்டு உக்ரைன் போர் காரணமாக தற்காவிகமாக இது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இதனை நடத்த முடிவு செய்துள்ளோம் எனவும்

இதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததே தவறு அப்போது நடத்தி இருக்க வேண்டும் காரணம் இந்த ஒத்திகையின் மூலமாக ரஷ்யாவுக்கு நேட்டோவின் தயார் நிலை பற்றியும் நேட்டோ பகுதி மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளின் பகுதிகளை தற்காத்து கொள்வதற்கான மன உறுதியை உணர்த்த முடியும் என கூறினார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி சமீபத்தில் ரஷ்யா மீது நேட்டோ அணு ஆயுத தாக்குதல் நடத்த வேண்டும் எனவும், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ரஷ்யா தன் மக்களையும் தனது பகுதிகளையும் பாதுகாக்க அணு ஆயுதங்களை நிச்சயமாக பயன்படுத்தும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.