நேட்டோவில் உக்ரைன் இணைய 9 நேட்டோ நாடுகளின் தலைவர்கள் ஆதரவு !!

ஒன்பது நேட்டோ நாடுகளின் அதிபர்கள் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர், கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவை சேர்ந்த இந்த நாடுகள் ரஷ்யாவின் படையெடுப்பையும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

செக் குடியரசு, எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா, வடக்கு மேசிடோனியா, மான்டிநீக்ரோ, போலந்து, ஸ்லோவாகியா மற்றும் ரூமேனியா ஆகிய ஒன்பது நாடுகளின் அதிபர்கள் தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் போருக்கு பின் உக்ரைன் சென்ற போது ரஷ்ய படையெடுப்பின் கொடுரத்தை நேரில் கண்டு உணர்ந்ததாகவும் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டதையும் அங்கீகரிக்க போவதில்லை எனவும்

உக்ரைனுடைய இறையாண்மை, பிராந்திய பாதுகாப்புக்கு தங்களது முழு ஆதரவை அளிப்பதாகவும் 2008 பூயிகாரெஸ்ட் நேட்டோ மாநாட்டில் உக்ரைனுக்கு எதிர்காலத்தில் நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து வழங்குதவற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.