விரைவில் உருவாக்கப்பட உள்ள முப்படைகள் கூட்டு ஏவுகணை கட்டளையகம் !!
இந்திய அரசு ஒரு ஒருங்கிணைந்த முப்படைகள் ஏவுகணை கட்டளையகத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளது, இது ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சைபர் மற்றும் விண்வெளி கட்டளையகங்களின் பாணியில் இருக்கும் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முப்படைகளிடம் உள்ள அனைத்து ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் இந்த கட்டளையகத்தின் கீழ் இருக்கும் இந்த கட்டளையகத்தை முப்படைகளை சேர்ந்த முன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் சுழற்சி முறையில் வழிநடத்துவர்.
சோவியத் காலகட்ட ஏவுகணைகள், ஆகாஷ், பிருத்வி, பிரம்மாஸ் தவிர அணு ஆயுதங்களை சுமந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி வரிசை ஏவுகணைகள், பினாகா போன்ற பல குழல் ராக்கெட் அமைப்புகள் ஆகியவை இந்த கட்டளையகத்தின் கீழ் இயங்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே சீன ராணுவத்தில் இதே போன்ற ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ராக்கெட் கட்டளையகம் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.