ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை இயக்குனர் கழுத்தறுத்து கொலை வீட்டில் வேலை செய்த பயங்கரவாதியின் கொடூர செயல் !!

ஜம்மு காஷ்மீர் காவல்துறை உடைய சிறைப்பிரிவின் தலைவர் ஹேமந்த் குமார் லோஹியா தனது வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைக்காரனால் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்த குற்ற சம்பவம் பற்றி பேசிய ஜம்மு பிராந்திய காவல்துறை கூடுதல் இயக்குனர் முகேஷ் சிங் ஹேமந்த் குமார் லோஹியாவின் வேலைக்காரன் ஜாசீர் தலைமறைவாகி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் தலைமை இயக்குனர் டிஜிபி தில்பாக் சிங் பேட்டி அளித்த போது இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு லோஹியா அவர்களின் வேலைக்காரன் ஜாசீர் என்பவனை தேடி வருகிறோம், கொலை செய்த பின்னர் உடலை எரிக்கவும் முயன்றுள்ளான் என தெரிவித்தார்.

தடயவியல் ஆய்வின் முடிவில் காலில் ஏதோ வீக்கம் காரணமாக லோஹியா ஏதோ எண்ணெய் தடவி உள்ள நிலையில் அவரை மூச்சு திணற வைத்து கொன்று பின்னர் கண்ணாடி பாட்டில் துண்டால் கழுத்தை அறுத்து உடலை எரிக்க முயன்றது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் வீட்டின் வெளியே இருந்த காவலர்கள் லோஹியா அவர்களின் அறையில் தீப்பற்றி எரிவதை பார்த்து வீட்டின் உள்ளே சென்று கதவை திறக்க முயன்று பின்னர் உடைத்து கொண்டு உள்ளே சென்றது குறிப்பிடத்தக்கது.