
குஜராத் மாநிலம் காந்திநகர் நகரத்தில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் DefExpo-2022 பிரதமர் மோடி இந்தியாவின் புதிய கனவு திட்டம் ஒன்றை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்க உள்ளார்.
இந்த புதிய கனவு திட்டமானது விண்வெளி சார்ந்த பாதுகாப்பு திறன்களை அதிகரிப்பது தொடர்பானதாகும் இதற்கு Mission DefSpace என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் முப்படைகளுக்கும் இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் உதவியோடு விண்வெளி சார்ந்த பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க ஊக்குவிப்பதே இதன் லட்சியமாகும்.
இந்த Mission DefSpace எனப்படும் கனவு திட்டம் மூலமாக இந்தியாவின் விண்வெளி சார்ந்த பாதுகாப்பு தயார்நிலை பன்மடங்கு அதிகரிக்கும் என்றால் மிகையாகாது, இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பு திறன்கள் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.