
சமீபத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரான ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் ஆயுத விற்பனை தொடர்பாக நடைபெறவிருந்த தொலைபேசி வாயிலான பேச்சுவார்த்தை நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து இஸ்ரேலுக்கான உக்ரைன் தூதர் யெவ்கென் கோர்னிசுக் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தகைய செயல் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு இஸ்ரேல அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை மேலும் எதிர்காலத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் உடன் எங்கள் பாதுகாப்பு அமைச்சர் தொடர்பு கொள்ள மாட்டார் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் ஒரு முறை இதே உக்ரைன் தூதர் யெவ்கென் கோர்னிசுக் இஸ்ரேலிய நிதி அமைச்சர் அவிக்டோர் லிபர்மானை இஸ்ரேல் நடுநிலை வகிக்க வேண்டும் என பேசியதற்காக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.