உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்க விருப்பம் இல்லை இஸ்ரேல் !!

  • Tamil Defense
  • October 22, 2022
  • Comments Off on உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்க விருப்பம் இல்லை இஸ்ரேல் !!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் ராக்கெட் தாக்குதல் ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் தற்கொலை விமான தாக்குதல் போன்றவற்றில் இருந்து தப்பிக்க உக்ரைன் இஸ்ரேல் உதவியை நாடி வருகிறது.

ஆனால் இஸ்ரேல் உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்க மறுத்து வருகிறது அதற்கு முக்கிய காரணமாக ரஷ்யாவை பகைத்து கொள்வதை இஸ்ரேல் விரும்பவில்லை எனவும் உக்ரைனில் உள்ள நாஜி பயங்கரவாத எண்ணம் கொண்டவர்கள் போன்றவை கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இஸ்ரேலின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் ஒரே நிலைபாட்டை எடுத்துள்ளன, குறிப்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் மற்றும் முன்னாள் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் உக்ரைனுக்கு இஸ்ரேல் ஆயுதம் விற்காது என ஒருமித்த குரலில் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் உக்ரைனைக்கு இதற்கு முன்பு ஆயுதம் விற்றதில்லை இனியும் விற்கும் எண்ணமில்லை ஆனால் அதே நேரத்தில் எங்களின் மனிதாபிமான உதவிகள் தொடரும் என ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.