விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் அடுத்த தலைமுறை இழுவை இயந்திரம் !!

  • Tamil Defense
  • October 17, 2022
  • Comments Off on விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் அடுத்த தலைமுறை இழுவை இயந்திரம் !!

சமீபத்தில் இந்திய கடற்படையில் இணைந்த INS VIKRANT விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் அடுத்த தலைமுறை இழுவை இயந்திரங்கள் பயன்படுத்தி வரப்படுவது சமீபத்திய புகைப்படங்கள் வாயிலாக வெளிவந்துள்ளது.

இந்த அடுத்த தலைமுறை இழுவை இயந்திரம் தற்போது விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் சோதனை செய்யப்பட்டு வருகிறது, இதனை ஜெர்மனியை சேர்ந்த MOTOTAK மோட்டோடாக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த MOTOTAK LB ரக இழுவை இயந்திரத்தை ரிமோட் மூலம் ஒரு நபர் இயக்கலாம், மின்சார சக்தியில் இயங்கும் இந்த இழுவை அமைப்பானது சுமார் 50 டன்கள் வரை எடையுள்ள விமானங்களை இழுக்கும் திறன் கொண்டதாகும்.

வழக்கமாக இந்த இழுவை பணியில் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் ஆனால் இவற்றிற்கு அதிக இடம் தேவைப்படும் ஆனால் இந்த புதிய இழுவை இயந்திரங்கள் இயங்கவும் விமானத்தை நகர்த்தி நிறுத்தவும் குறைந்த இடமே போதும் என்பது இதன் சிறப்பாகும்.