முதல்முறையாக அரிஹந்த் நீர்மூழ்கியில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்ட K-15 ஏவுகணை !!

  • Tamil Defense
  • October 15, 2022
  • Comments Off on முதல்முறையாக அரிஹந்த் நீர்மூழ்கியில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்ட K-15 ஏவுகணை !!

இந்தியா நேற்று தனது அரிஹந்த் அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலில் இருந்து K-15 ரக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது, அரிஹந்த் நீர்மூழ்கி ஏவுகணையை ஏவுவது இதுவே முதல்முறை என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 750 முதல் 1500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

வங்க கடலில் நடைபெற்ற இந்த சோதனையின் போது K-15 ஏவுகணையானது அனைத்து இயக்கம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை வெற்றிகரமாக நிருபித்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனையின் மூலமாக இந்தியாவின் அணு ஆயுத தாக்குதல் திறன்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் உலகளாவிய ரீதியில் இந்திய கடற்படையின் வலிமை பன்மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.