ஆஸ்திரிய ட்ரோனை இந்தியாவில் தயாரிக்க உள்ள இந்திய நிறுவனம் !!
1 min read

ஆஸ்திரிய ட்ரோனை இந்தியாவில் தயாரிக்க உள்ள இந்திய நிறுவனம் !!

இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான VEM Technologies ஆஸ்திரியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான Schiebel ஷ்கிபெல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.

அதாவது ஷ்கிபெல் நிறுவனம் தயாரிக்கும் ஹெலிகாப்டர் போன்ற Camcopter S-100 ரக ஆளில்லா விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க VEM Technologies மேற்குறிப்பிட்ட ஆஸ்திரிய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைமுறைகளின்படி இந்த ஆளில்லா விமானத்தில் 60 சதவிகித பாகங்கள் இந்திய தயாரிப்பாக இருக்க வேண்டும், அடுத்த 6 மாதங்களில் தயாரிப்பு துவங்கும் ஒரு வருடம் ஆனதும் தயாரிப்பு வேகம் அதிகப்படுத்தப்படும்.

இந்த வகை ஆளில்லா வானூர்திகளால் எந்த வகையான கப்பலிலும் இருந்து எந்த விதமான காலநிலையிலும் இயங்க முடியும், கடந்த காலத்தில் இதே ஆளில்லா விமானம் இந்திய கடற்படைக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில்,

தற்போது VEM Technologies நிறுவனம் இந்த Camcopter S-100 ஆளில்லா வானூர்தியை இந்திய கடற்படையின் NSUAS Naval Shipborne Unmanned Aerial Systems அதாவது கடற்படை கப்பல்சார் ஆளில்லா வானூர்திகள் திட்டத்தின் கீழ் அளிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இது ஏற்கனவே இங்கிலாந்து கடலோர காவல்படை மற்றும் ஃபிரான்ஸ், தாய்லாந்து, இந்தோனேசிய கடற்படைகளால் பயன்படுத்தி வரப்படுவதும் குறிப்பிடத்தக்கது.