கடைசி IL-38 கடல்சார் போக்குவரத்து விமானத்திற்கு விரைவில் ஒய்வு !!

இந்திய கடற்படை சோவியத் காலகட்ட Ilyushin நிறுவனம் தயாரித்த IL-38 ரக தொலைதூர கடல்சார் கண்காணிப்பு விமானத்தை பயன்படுத்தி வருகிறது, தற்போது இந்த வகையை சேர்ந்த கடைசி விமானத்திற்கு ஒய்வளிக்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு வாக்கில் இந்த விமானம் படையில் இருந்து விலக்கப்படும், இது இந்திய கடற்படையில் இணைந்து சுமார் 46 ஆண்டுகள் நாட்டு பணி ஆற்றியுள்ளது இதன் சிறப்பாகும்.

ஏற்கனவே இந்திய கடற்படை இத்தகைய 3 விமானங்களுக்கு ஒய்வளித்து படையில் இருந்து விலக்கியதும் 2002ஆம் ஆண்டில் இத்தகைய 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 கடற்படையினர் உயிர் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய குறிப்பிட்ட அளவில் இத்தகைய தொலைதூர கடல்சார் கண்காணிப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை விமானங்களை பயன்படுத்தி வரும் நிலையில் இந்திய கடற்படை அமெரிக்க போயிங் பி8 BOEING P8 ரக தொலைதூர கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை விமானங்களை பயன்படுத்தி வருவது கூடுதல் தகவலாகும்.