கடற்படையின் மிக்29 விமானம் விபத்து; விமானி பத்திரம் !!
இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக்-29 கே Mig-29K ரக போர் விமானம் ஒன்று நேற்று கோவா அருகே கடல்பகுதியில் வழக்கமான பயிற்சியை மேற்கொண்டு விட்டு தனது படைத்தளம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தது.
அப்போது வழியில் தீடிரென விமானம் கடலுக்குள் விழுந்து விபத்தை சந்தித்தது, விமானத்தைய இயக்கிய போர் விமானி Election Seat மூலமாக வெளியேறி உயிர் தப்பினார், பின்னர் அவரை இந்திய கடற்படையின் த்ரூவ் மார்க்3 ஹெலிகாப்டர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தது.
தற்போது இந்திய கடற்படை இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, அதே நேரத்தில் சில தகவல்கள் போர் விமானத்தில் தீடிரென ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறுகின்றன எனினும் விசாரணையின் முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும் என இந்திய கடற்படை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
2019ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் நான்காவது மிக்-29 விபத்து இதுவாகும், நவம்பர் 2019ல் கோவாவில் ஒரு கிராமம் அருகே மிக்-29 கே.யு.பி MIG-29 KUB விமானம் தரையில் விழுந்து விபத்தை சந்தித்தது அதில் இரண்டு விமானிகள் உயிர் தப்பினர்.
பின்னர் 2020ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் பறவைகள் மோதியதால் கட்டுபாட்டை இழந்த Mig-29 KUB விமானம் ஒன்று விபத்தை சந்தித்தது, இதில் விமானிகள் இருவரும் மக்கள் இல்லாத இடத்தை நோக்கி விமானத்தை செலுத்தி பின்னர் வெளியேறி உயிர் தப்பினர்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் ஒரு MIG-29 KUB ரக விமானம் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடலில் விழுந்து விபத்தை சந்தித்தது இதில் ஒரு விமானி உயிர் தப்பிய நிலையில் மற்றொரு விமானியான கமாண்டர் நிஷாந்த் சிங் உடல் 11 நாட்கள் கழித்து தான் மீட்கப்பட்டது.
MIG-29 K என்பது ஒற்றை இருக்கை அதாவது ஒற்றை விமானி இயக்கும் போர் விமானம் மேலும் MIG-29 KUB என்பது இரட்டை இருக்கை அதாவது இருண்டு விமானிகள் இயக்கும் போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.