தனது படையணியுடன் இணைந்து செயலாற்றும் பயிற்சிகளில் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் !!

  • Tamil Defense
  • October 15, 2022
  • Comments Off on தனது படையணியுடன் இணைந்து செயலாற்றும் பயிற்சிகளில் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் !!

INS VIKRANT விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பல் தற்போது தனது படையணியுடன் இணைந்து செயலாற்றுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளது, இதனை மேற்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் மேற்பார்வை செய்தார்.

விமானந்தாங்கி கப்பல்கள் தன்னந்தனியாக இயங்குவது இல்லை மாறாக நாசகாரி கப்பல்கள், ஃப்ரிகேட், கார்வெட், டேங்கர், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை அடங்கிய குழுவுடன் அதற்கு தலைவராக இயங்கும் இந்த குழுவை CBG Carrier Battle Group அதாவது விமானந்தாங்கி போர் படையணி என அழைப்பர்.

அந்த வகையில் விக்ராந்த் தனது படையணியில் உள்ள அனைத்து கப்பல்களுடன் திறம்பட இயங்குவதற்காக சிறப்பான நிலையை எட்டும் வகையில் ஒருங்கிணைப்பு பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளது, இதில் விக்ராந்த் தலைமையில் ஒட்டுமொத்த படையணியின் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் சோதிக்கப்பட உள்ளன.

அடுத்த ஆறு மாதங்களில் விக்ராந்த் மற்றும் அதன் படையணி முழு அளவிலான நடவடிக்கைளில் ஈடுபட தயாராகி விடும் என்பதும் விக்ராந்த் தனது ரேடார்கள் தவிர ரூக்மினி-1 செயற்கைகோள், P8 தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம், Predator ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றில் இருந்தும் தகவல்களை பெற்று கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.