6 மாதங்கள் மட்டுமே இயங்க வடிவமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் இயங்கி செயலிழந்த இந்தியாவின் செவ்வாய் கிரக செயற்கைகோள் !!

  • Tamil Defense
  • October 3, 2022
  • Comments Off on 6 மாதங்கள் மட்டுமே இயங்க வடிவமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் இயங்கி செயலிழந்த இந்தியாவின் செவ்வாய் கிரக செயற்கைகோள் !!

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா சுமார் 450 கோடி ரூபாய் செலவில் PSLV C25 ராக்கெட் மூலமாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய MOM – Mars Orbiter Mission எனும் செயற்கை கோள் கருவியை மங்கள்யான் திட்டத்தின் மூலமாக அனுப்பியது.

வெறும் 6 மாதங்கள் மட்டுமே இயங்குவதற்கான பேட்டரி திறனை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கை கோள் ஏறத்தாழ சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி சாதனை புரிந்துள்ளது மேலும் தனது ஆயுட்காலத்தில் பல முக்கிய தகவல்களையும் நமக்கு அளித்நுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை இது சென்று அடைந்த நிலையில் தற்போது பேட்டரி முழுவதும் காலியாகி செயலிழந்து தனது இயக்கத்தை நிறுத்தி உள்ளதாகவும் பூமியில் உள்ள மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த MOM செயற்கைகோளில் 15 கிலோ எடையில் ஐந்து மிக முக்கியமான கருவிகள் இருந்தன அவையாவன MARS Color Camera MCC, MARS Exospheric Neutral Composition Analyser MENCA, Lyman Alpha Photometer LAP, Thermal Infrared Imaging Spectrometer TIS மற்றும் Methane Sensor for MARS MSM இவை புவியியல், வளிமண்டலம், நிலப்பரப்பு, தட்பவெப்ப நிலை, உருவவியல் போன்ற தகவல்களை சேகரிக்க பயன்பட்டன.

தற்போது இந்த சம்பவம் குறித்து மகிழ்ச்சி மற்றும் சோகம் என கலவையான உணர்வுகள் விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் நிலவி வரும் சூழலில் ISRO இஸ்ரோ அல்லது இந்திய அரசோ இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.