இந்தியாவின் முதல் ஆளில்லா தாக்குதல் ரோந்து படகுகள் வெற்றிகரமாக சோதனை !!
வருகிற வியாழக்கிழமை இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு கண்காட்சி துவங்க உள்ள நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் பூனே நகரில் மிக முக்கியமான அதிநவீன தளவாடங்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு உள்ளன.
அதாவது பொதுத்துறையை சேர்ந்த DRDO Defence Research and Development Organization மற்றும் Sagar Defense எனப்படும் தனியார் நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து தயாரித்த மூன்று வெவ்வேறு ஆளில்லா படகுகள் சோதனை செய்யப்பட்டு உள்ளன.
இந்த ஆளில்லா படகுகளை தாக்குதல், ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ளலாம், நிலத்தில் உள்ள கட்டுபாட்டு மையத்தில் இருந்து கேமரா மற்றும் ஆண்டென்னா உதவியுடன் இவற்றை இயக்க முடியும்.
இந்த படகுகளால் நான்கு மணி நேரம் தொடர்ந்து இயங்க முடியும், ஏறத்தாழ மணிக்கு 19 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் இந்த வேகத்தை மணிக்கு 46 கிலோமீட்டர் ஆக அதிகரித்து கொள்ள முடியும் எனவும்
மேலும் இவற்றில் சில ஆளில்லா படகுகளில் வழக்கமாக பயன்படுத்தி வரப்படும் டீசல் என்ஜின்கள் உள்ளதாகவும் சில ஆளில்லா படகுகளில் எலெக்ட்ரிக் என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.