
இந்திய தரைப்படை எதிரி நிலைகளை துல்லியமாக தாக்க உதவும் திறன் கொண்ட இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட 240 துல்லிய தாக்குதல் ஆளில்லா விமானங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
80 Mini RPAS – Remotely Piloted Aircraft Systems அதாவது ரிமோட் மூலமாக இயக்கப்படும் சிறிய வானூர்திகள், ஒடுதளத்தின் தேவையின்றி இயங்கும் 10 RPAS ட்ரோன்கள், 44 தொலைதூர கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் 106 வழிகாட்டி அமைப்புகள் ஆகியவற்றை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
விரைவில் இதற்கான டென்டரை இந்திய தரைப்படை வெளியிடு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ட்ரோன்கள் இரவு மற்றும் பகலிலும் இயங்கும் திறன் கொண்டவை ஆகும் மேலும் இவை 15-90 கிலோமீட்டர் தொலைவு வரை இயங்கும் திறன் கொண்டவை ஆகும்.
எல்லையோரம் பிரங்கி படையினர் எதிரிகளின் இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்த இந்த ட்ரோன்கள் உதவும் இவற்றின் செயல்பாடு திருப்தி அளிக்கும் பட்சத்தில் இந்திய தரைப்படை அதிகளவில் இத்தகைய ஆளில்லா விமானங்களை வாங்கும் என கூறப்படுகிறது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிழக்கு லடாக்கில் சுமார் 35000 வீரர்களுக்கான தங்குமிடங்கள், 450 டாங்கிகள் மற்றும் 350 பிரங்கி அமைப்புகளுக்கான நிறுத்துமிடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கூறினார்.