கடந்த 11ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பிராந்தியத்தின் அனந்த்னாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கக இருப்பதாக பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அந்த பகுதியை இந்திய தரைப்படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்திய போது இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டிற்குள் ராணுவ மோப்பநாய் ஸூம் ZOOM அனுப்பப்பட்டது.
உள்ளே சென்று இந்த நாயை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர் அப்போது நாயின் காலில் குண்டு பாய்ந்த கால் முறிந்த நிலையிலும் வேகமாக சென்று ஒரு பயங்கரவாதியை கவ்வி பிடித்தது, இப்படி இரண்டு பயங்கரவாதிகளையும் ராணுவ வீரர்கள் கொல்வதற்கு உறுதுணையாக இருந்தது.
ஆனால் பின்னங்கால் உடைந்து முகத்தில் துப்பாக்கி குண்டுகள் உரசியதில் ஏற்பட்ட காயத்துடன் உயிருக்கு போராடும் நிலையில் சுருண்டு விழுந்த மோப்பநாயை உடனடியாக வீரர்கள் மீட்டு ஶ்ரீநகரில் உள்ள ராணுவ விலங்குகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தீவிர கண்காணிப்பில் இந்த நான்கு கால் வீரன் ஸூம் வைக்கப்பட்டுள்ள நிலையில் ராணுவ விலங்கியல் மருத்துவர்கள் அடுத்த 48 மணி நேரம் முக்கியமான கட்டம் என கூறினர், ஸூம் பெல்ஜியன் மாலினோய்ஸ் இனத்தை சேர்ந்த நாய் என்பது குறிப்பிடத்தக்கது.