ரஷ்யா மீதான தீர்மானம் வாக்களிக்காமல் வெளியேறிய இந்தியா மற்றும் சீனா !!

  • Tamil Defense
  • October 1, 2022
  • Comments Off on ரஷ்யா மீதான தீர்மானம் வாக்களிக்காமல் வெளியேறிய இந்தியா மற்றும் சீனா !!

நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான க்ரெம்ளினில் நடைபெற்ற விழாவில் உக்ரைனுடைய நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்தார்.

இதற்கு முன்னதாக இந்த நான்கு பகுதிகளான டொனெட்ஸ்க், லூஹான்ஸ்க், கெர்சோன் மற்றும் ஸ்ப்ரோஸியா ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க பொது ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு அதில் 99% மக்கள் ரஷ்யாவுடன் இணைய ஆதரவாக வாக்களித்ததாக கூறப்பட்டது.

இது போலியான முறையில்லாத சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான வாக்கெடுப்பு என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதனை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது இதில் இந்தியா சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்தன.

ஏற்கனவே இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது உலக அரங்கில் இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.