Turbojet திறன் கொண்ட மிதவை குண்டுகளை பெற விரும்பும் இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படை போர் விமானங்களில் இருந்து ஏவப்படக்கூடிய Turbojet திறன் கொண்ட சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து தாக்கும் திறன் கொண்ட மதிவை குண்டுகளை வாங்க விரும்புகிறது.

அந்த வகையில் தற்போது இந்திய விமானப்படை ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வழக்கமான Propeller எனும் விசிறி போன்ற அமைப்பால் இயங்கும் மிதவை குண்டுகளை விடவும் இந்த Turbojet என்ஜினால் இயங்கும் மிதவை குண்டுகள் பன்மடங்கு வேகமானவை ஆகும் இதனாலேயே பல நன்மைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் ALCM ரக க்ரூஸ் ஏவுகணைகளை விடவும் விலை மலிவானவை ஆகும், மேலும் இவை இருவழி தகவல் தொடர்பு, இரவு பகல் ,எத்தகைய தட்பவெப்ப நிலை மற்றும் அதிக உயர பகுதிகளிலும் இயங்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.