இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பென் வால்லெஸ் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா அணு ஆயுத பயன்பாட்டை விரும்பாது ஆகவே ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் அளவுக்கு துணியமாட்டார் என கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற SCO Shanghai Cooperation Council மாநாட்டின் போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் உடனான சந்திப்பின் போது எதையெல்லாம் ஏற்று கொள்வோம் எதை எல்லாம் ஏற்று கொள்ளமாட்டோம் என தெளிவாக அறிவுறுத்தி உள்ளதாகவும்
எது எப்படியோ ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உடைய செயல்பாடுகள் கணிக்க முடியாதவையாக இருப்பதால் இதனை உறுதியாகவும் கணிக்க முடியாது எனவும் பென் வால்லெஸ் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இங்கிலாந்து முப்படை தலைமை தளபதி அட்மிரல் டோனி ரடாகின் பேசும்போது ரஷ்யா விண்வெளி சார்ந்த ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம், விளாடிமீர் புடின் தற்போது இங்கிலாந்துக்கு நீண்ட கால ஆபத்தாக உருவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சற்று நாட்களுக்கு முன்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ரஷ்யா மற்றும் ரஷ்ய கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை பாதுகாக்க ரஷ்யா எந்த எல்லைக்கும் போக தயார் தொலைக்காட்சி உரை ஒன்றில் பேசியது குறிப்பிடத்தக்கது.