10 மெகா ஜூல் திறன் கொண்ட நடுத்தர ரக மின்காந்த பிரங்கி Rail Gun அமைப்பு விரைவில் சோதனை !!

மஹாராஷ்டிரா மாநிலம் பூனே நகரில் அமைந்துள்ள Defence Research and Development Organisation உடைய ஒரு பிரிவான ARDE Armament Research and Development Establishment அமைப்பு ஒரு முக்கிய சாதனையை புரிந்துள்ளது.

அதாவது 10 Mega Joule மெகா ஜூல் திறன் நடுத்தர ரெயில் கன் Rail Gun அமைப்பை உருவாக்கி உள்ளது, இதை மின்காந்த பிரங்கி என்றும் சொல்லலாம் விரைவில் இது சோதனை செய்யப்பட உள்ளது.

இதனால் 500 கிராம் முதல் 1 கிலோ எடை வரை கொண்ட குண்டுகளை சுட முடியும். க்ரூஸ் ஏவுகணைகள், பலிஸ்டிக் ஏவுகணைகள், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், தரை மற்றும் கடல் பரப்பு இலக்குகளை தாக்கி அழிக்க இது உதவும்.

இனி அடுத்த கட்டமாக ARDE சுமார் 100 மெகா ஜூல் திறன் கொண்ட மின் காந்த பிரங்கிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது, இவற்றை கொண்டு சுமார் 18 கிலோ எடை கொண்ட குண்டுகளை நொடிக்கு சுமார் 2 கிலோமீட்டர் வேகத்தில் 100 முதல் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கியழிக்க பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது சிறப்பாகும்.

மின்காந்த பிரங்கிகளில் பயன்படுத்தப்படும் இணை அமைப்புகளான Capacitor based Pulsed Power System, Charging station, Control System, Raligun Launcher, Isolated Optical Trigger System, Projectile design, Data Acquisition System ஆகியவை ஏற்கனவே சிறிய 4 மற்றும் 6 மெகா ஜூல் திறன் கொண்ட மின்காந்த பிரங்கிகளை கொண்டு சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.