
ரஷ்யாவின் ரோஸ்போரான்எக்ஸ்போர்ட் RosboronExport நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் மிகீவ் இந்த ஆண்டு இறுதிக்கு முன்பாக இந்தியாவிலேயே ஏகே203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் ரோஸ்போரான்எக்ஸ்போர்ட் நிறுவனம் கலந்து கொண்டுள்ளது ஆகவே அதில் கலந்து கொள்ள வருகை தந்த அலெக்சாண்டர் மிகீவ் செய்தியாளர்களிடம் இந்த தகவல்களை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது உத்தர பிரதேச மாநிலத்தின் அமெதி மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரத்தில் அமைந்துள்ள கோர்வா ஆயுத தொழிற்சாலை இந்த தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் எனவும் துப்பாக்கியின் பாகங்கள் அனைத்துமே இந்திய தயாரிப்பாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
இது தவிர ROSBORONEXPORT நிறுவனமானது எதிர்காலத்தில் துப்பாக்கியை மேம்டுத்துவதற்கான இதர அமைப்புகளையும் வீரர்களுக்கு தேவையான அமைப்புகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.