அடுத்த தலைமுறை வானிலேயே எரிபொருள் நிரப்பும் கருவிகளை தயாரிக்க உள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • October 31, 2022
  • Comments Off on அடுத்த தலைமுறை வானிலேயே எரிபொருள் நிரப்பும் கருவிகளை தயாரிக்க உள்ள இந்தியா !!

இந்தியாவின் DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அடுத்த தலைமுறை வானிலேயே எரிபொருள் நிரப்பும் கருவிகளை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக DRDO இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது ஆகவே ஆர்வமுள்ள நிறுவனங்களை தேடி வருகிறது, இவை இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து தயாராக்கும் எரிபொருள் டேங்கர் விமானங்களில் பயன்படுத்தப்படும்.

இந்தியாவின் Hindustan Aeronautics Limited HAL மற்றும் இஸ்ரேலின் IAI – Israeli Aerospace Industries எனப்படும் இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை நிறுவனம் ஆகியை இதற்காக பயன்படுத்தபட்ட Boeing B777 ரக பயணிகள் விமானங்களை வாங்கி டேங்கர் மற்றும் போக்குவரத்து பல உபயோக விமானங்களாக மாற்றியமைக்க உள்ளனர்.

இந்தியா ஏர்பஸ் Airbus நிறுனத்துடனான A330 MRTT Multi Role Tanker Transport பல நடவடிக்கை டேங்கர் போக்குவரத்து விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகு இந்த புதிய திட்டத்தை கையில் எடுத்து இந்தியாவிலேயே மேற்கொள்ள திட்டமிட்டது கூடுதல் தகவல் ஆகும்.

இந்த புதிய B767 MMTT ரக டேங்கர் விமானங்களில் இறக்கைகளில் 2 எரிபொருள் நிரப்பு குழாய்கள் மற்றும் உடலில் பின்பகுதியில் இடது பக்கத்தில் 1 எரிபொருள் நிரப்பு குழாயும் என மொத்தமாக 3 எரிபொருள் நிரப்பும் குழாய்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்திய விமானப்படையின் ஆபரேட்டர் ஒருவர் விமானத்தில் உள்ள ஆபரேட்டர் மையத்தில் இருந்து கொண்டு இந்த மூன்று எரிபொருள் நிரப்பும் குழாய்களை கட்டுபடுத்தி போர் விமானங்கள் நடுவானிலேயே எரிபொருள் நிரப்ப உதவுவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.