பிருத்வி ஏவுகணைகளின் மாற்று ப்ரளய் !!

ப்ரளய் குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் 2024ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து பிருத்வி பலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு மாற்றாக படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ரளய் ஏவுகணையின் அதிகபட்ச தாக்குதல் தொலைவு 500 கிலோமீட்டர் ஆகும், 5000 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணையால் 1000 கிலோ எடை கொண்ட குண்டை சுமந்து செல்ல முடியும் அதிலும் குறிப்பாக ஐந்து வெவ்வேறு வகையான குண்டுகளை இதனால் சுமக்க முடியும் எனவும்.

1000 கிலோ குண்டை சுமந்து கொண்டு 350 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்ட இதில் 500 கிலோ குண்டை வைத்தால் இந்த ஏவுகணையால் 500 கிலோமீட்டர் தூரம் வரை பாய முடியும், 30 மீட்டர் துல்லிய திறன் கொண்டது, அதிக சக்தி வாய்ந்த திட எரிபொருளை பயன்படுத்துவதால் பிருத்வி-3 ஏவுகணையை விடவும் வேகமாக இலக்கை அடையும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ப்ரளய் ஏவுகணைகளை இந்திய தரைப்படை எதிரியின் நிலபரப்பில் தாக்குதல் நடத்த பயன்படுத்தாது மாறாக நமது எல்லைக்குள் எதிரி படைகள் நுழைந்தால் ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற கண்காணிப்பு திறன்களை கொண்டறிந்து தாக்குதல் நடத்த பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.